Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரண குணவர்தனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!

In இலங்கை
Updated: 10:06 GMT, Nov 14, 2017 | Published: 10:06 GMT, Nov 14, 2017 |
0 Comments
1184
This post was written by : Ravivarman

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்குக் கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆடிகல இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் வாகனங்களை வாடகைக்குப் பெற்றபோது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக தொடரப்பட்டிருக்கும் 09 வழக்குகள் தொடர்பிலான மேலதிக சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கிற்கான சாட்சிகள் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த நிலையில் சரண குணவர்தன சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படாததால் கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆடிகல இந்த உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg