Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

In இலங்கை
Updated: 10:19 GMT, Nov 14, 2017 | Published: 10:19 GMT, Nov 14, 2017 |
0 Comments
1223
This post was written by : Ravivarman

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கந்தசாமி கோவிலில் இறைவழிபாட்டின் பின் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ‘எமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் மற்றும் கணவன்மார்களை மீட்பதற்கு ஐ.நா.வில் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நன்றி’ என்ற பதாதையை தாங்கியிருந்தனர்.

மேற்படி கவனயீர்ப்பு ஊர்வலம் பஸார் வீதியூடாக வவுனியா பொதுவைத்தியசாலையை வந்தடைந்து, அங்கிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் நடத்தும் மேடையை வந்தடைந்தது

காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரி வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 164 ஆவது நாட்களை எட்டியுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா கருத்து தெரிவிக்கையில்,

‘இறைவழிபாட்டுடன் இந்த கவனயீர்ப்பை மேற்கொண்டுள்ளோம். சர்வதேச நாடுகள் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் இல்லாதவிடத்து எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்’ எனத் தெரிவித்தார்.

DSC_0027 DSC_0025 DSC_0016 DSC_0003

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg