Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரறிவாளனின் மனுவிற்கு அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!

In இந்தியா
Updated: 12:29 GMT, Nov 14, 2017 | Published: 11:13 GMT, Nov 14, 2017 |
0 Comments
1323
This post was written by : Kemasiya

ரஜீவ்காந்தி கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை நிறுத்த கோரி, பேரறிவாளன் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு, இரண்டு வாரத்திற்குள் அரசு பதிலளிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (செவ்வாய்கிழமை) குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியைக் கொலை செய்த தற்கொலை அங்கியில் பொருத்தப்பட்ட 2 பற்றரிகளை வாங்கிக் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பேரறிவாளன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 19 வயதில் கைதான பேரறிவாளன் கடந்த 23 வருடங்களாக ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ள மனுவில், தான் பற்றரிகளை வாங்கிக் கொடுத்தாலும் அது எதற்குப் பயன்படுத்தப்படப் போகின்றது என்பதை தான் அறியவில்லை என்று கூறியிருக்கும் அவர், தான் வாங்கிக் கொடுத்த பற்றரிகள்தான் தற்கொலை அங்கியில் பயன்படுத்தப்பட்டதா என்பதையும் சி.பி.ஐ உறுதி செய்யவில்லையென சுட்டிக் காட்டியுள்ளார்.

இவரது வாக்குமூலத்தை பதிவு செய்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன், தனது தவறினை அண்மையில் தமிழக புதிய தலைமுறை தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தமையும் சுட்டிக் காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg