Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளம் நகரசபை உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

In இலங்கை
Published: 10:38 GMT, Nov 14, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Ravivarman
20171114_120114

புத்தளம் நகரசபையின் உத்தியோகத்தர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

புத்தளம் நகரசபை எல்லையினுள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் போது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக புத்தளம் நகரசபை, அதன் கீழ் இயங்கும் நூல் நிலையங்கள், பொது மலசல கூடங்கள், நகரசபை வேலைத்தளம், நகரசபை பூங்காக்கள் யாவும் மூடப்பட்டு அதன் முன் வாசல்களில் ‘மூடப்பட்டுள்ளது’ என்ற வாசகம் மூன்று மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தமது இந்த நடவடிக்கையினால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தமது கவலையினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அங்கு கட்டப்பட்டிருந்த பதாதைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

20171114_121801 20171114_115453 20171114_103309 20171114_103213

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg