Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தீர்வை பெற்றுத்தருவார்! – கிளிநொச்சி மக்கள் நம்பிக்கை

In இலங்கை
Published: 10:48 GMT, Nov 14, 2017 |
0 Comments
1245
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

தமிழர் தாயகத்தில் யுத்தத்தின் போதும் படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள், நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.

இச்சந்திப்பின்போது, ஜனாதிபதி தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவாரென்ற நம்பிக்கை உள்ளதாக கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்க செயலாளர் ஆ.லீலாதேவி எமது ஆதவன் செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம், தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான திகதியொன்றை ஒதுக்கித் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் அடிப்பையிலேயே, ஜனாதிபதி செயலகத்தில் நாளை மறுதினம் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமது கோரிக்கையை மதித்து ஜனாதிபதி இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளமை திருப்தியளித்தாலும், மறைத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் தொடர்பான விபரங்களை வெளிக்கொண்டு வருவதற்கான ஒழுங்குகளை ஜனாதிபதி மேற்கொள்வதன் மூலமே முழுமையாக திருப்தியடைய முடியுமென லீலாதேவி மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு, தமது கோரிக்கைகளையும் ஏக்கங்களையும் புரிந்துகொண்டு, தமது பிள்ளைகளுடன் வாழ்வதற்கு வழியேற்படுத்தித் தருவாரென்ற நம்பிக்கையுடன் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத் தலைவி கனகரஞ்சனி யோகராசா தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ள, 8 மாவட்டங்களைச் சேர்ந்த 31 பிரதிநிதிகள் நாளைய தினம் கொழும்பு நோக்கி பயனிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)