Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதியோரைப் பேணுதல் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் ஊர்வலம்!

In இலங்கை
Updated: 10:56 GMT, Nov 14, 2017 | Published: 10:48 GMT, Nov 14, 2017 |
0 Comments
1199
This post was written by : Ravivarman

முதியோரைப் பேணுதல் எனும் தொனிப்பொருளில் வவுனியா சமூக சேவைத் திணைக்களம் மற்றும் மாவட்ட முதியோர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ரோஹண புஸ்குமார பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக பேருந்துகளில் முதியோருக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பான ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டது.  அதனை தொடர்ந்து வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலமானது புகையிரத வீதியூடாக வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தை வந்தடைந்திருந்தது.

இதன் போது வவுனியா நகர கலாசார மண்டபத்தில் முதியோருக்கான கௌரவிப்புகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், விவசாயக்கல்லூரி மாணவர்கள், இலங்கை உயர் தொழில்நுட்ப கல்லூரி நிறுவன மாணவர்கள், நைற்றா மாணவர்கள், மற்றும் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், முதியோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

DSC_0095 DSC_0079

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg