Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்திரேலிய கடற்படையின் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

In இலங்கை
Updated: 12:01 GMT, Nov 14, 2017 | Published: 12:01 GMT, Nov 14, 2017 |
0 Comments
1151
This post was written by : Ravivarman

அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான நியூகாசல் கப்பல் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இதன்போது குறித்த கப்பல் இலங்கை கடற்படையின் சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகளுடன் விமர்சையாக வரவேற்கப்பட்டது.

138.1 மீற்றர் நீளமும் 14.3 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் 4,200 மெட்ரிக் டொன் கொள்ளளவைக் கொண்டிருப்பதுடன் 184 ஊழியர்கள் அதில் கடமையாற்றுகின்றனர்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ சுற்றுலா மேற்கொண்டுள்ள குறித்த கப்பலின் ஊழியர்கள் இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன், எதிர்வரும் 17ஆம் திகதி குறித்த கடற்படைக் கப்பல் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 5 (1) 3 1 (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg