Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருணாநிதி என்னை பார்த்து புன்னகைத்தார்: சேகர் நெகிழ்ச்சி!

In இந்தியா
Updated: 12:13 GMT, Nov 14, 2017 | Published: 12:13 GMT, Nov 14, 2017 |
0 Comments
1365
This post was written by : Kemasiya

கருணாநிதியால்  பேச முடியாவிட்டாலும்,  மலர்ந்த சிரிப்புடன்  தன்னை பார்த்ததாக, பா.ஜ.க. பிரமுகரும்,  நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்கிழமை ) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக,  நேற்று (திங்கட்கிழமை) இரவு 8.45 மணியளவில் அவருடைய வீட்டிற்கு சென்றிருந்ததாகவும்.

அவ்வேளை தன்னுடன் பேச முடியாவிட்லும், அகம் மகிழ்ந்து புன்னகைத்தார் எனவும் சேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வேளையில்,  நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என கூறி,  GET WELL SOON card  ஐ அவரிடம் கொடுத்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டார்.

உண்மையில் கலைஞரின் மனோ தைரியம்,  எல்லா முதியவர்களிடமும் இருக்க வேண்டும் என,  அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg