Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான ஜிலேபி!

In
Published: 12:10 GMT, Nov 14, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Vithushagan
hqdefault

தேவையான பொருட்கள்

உளுத்தம்பருப்பு – 250g
பச்சரிசி – 100g
சீனி – 250g
ஒரேஞ்ச் பவுடர்(கேசரிப்பவுடர்)- சிறிதளவு
பொலித்தீன்பை – 1
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
எண்ணெய் , நீர் , உப்பு- தேவையான
அளவு

செய்முறை

முதலில் உளுத்தம்பருப்பையும் , பச்சரியையும் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.  ஊறியதும் நீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

அரைத்த கலவையில் ஒரேஞ்ச் பவுடர் , உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.  அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் ,

மாக்கலவையை பொலித்தீன்பையில் விட்டு அதன் ஒரத்தில் சிறிய துவாரம் இட்டு வட்டவடிவில் மாக்கலவையை பிழியவும்.  பொன்னிறமாகும்வரை பொரித்து எடுக்கவும்.

சீனியை நீர்விட்டு கம்பிப்பதத்திற்கு பாகு காய்ச்சவும் . அத்துடன் சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

பொரித்தெடுத்த ஜிலேபியை பாகில் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து எடுத்து  பரிமாறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg