Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா தொழில்நுட்பக்கல்லூரிக்கு 24 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்!

In இலங்கை
Updated: 12:33 GMT, Nov 14, 2017 | Published: 12:33 GMT, Nov 14, 2017 |
0 Comments
1638
This post was written by : Ravivarman

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள அனைத்துக் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கற்கை நெறிக்கான முடிவுத்திகதி எதிர்வரும் 24 ஆம் திகதி என்பதனால் ஆண்டு 9 இல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும் தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார்.

கற்கை நெறியின் போது மாணவர்களுக்கு இலவசக் கற்கைநெறி, மாணவர் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, போக்குவரத்துப் பயணச்சீட்டு, தொழில் வழிகாட்டல் சேவை கற்கைநெறியின் பின்னர் மாணவர்களுக்கு 06 மாத கால தொழிற்பயிற்சி, உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, கடன் பெற்றுக் கொள்ளும் வசதி என்பனவும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலதிக தொடர்புகளுக்கு அதிபர், தொழில்நுட்பக் கல்லூரி, மன்னார் வீதி, நெளுக்குளம், வவுனியா. எனும் முகவரியிலும், 024 222 3664, 024 222 6720, எனும் தொலைபேசி இலக்கங்களுடனும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg