Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிருகபலித் தடைக்கு எதிராக மேன்முறையீடு

In இலங்கை
Updated: 17:37 GMT, Nov 14, 2017 | Published: 16:12 GMT, Nov 14, 2017 |
0 Comments
1379
icon_com
This post was written by : S.K.Guna
KAVUNAVATTAI KOVIL

ஆலயங்களில் மிருகபலி வேள்விக்குத் தடைவிதித்து, யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது.

யாழ்ப்பாணம் கவுணாவத்தை ஆலயம் சார்பில் மேன்முறையீட்டுமனு மற்றும் அறிவிப்பை சட்டத்தரணி வீ.கௌதமன் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

‘யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில், மிருகபலி வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை, இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன.

அவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும்’ எனக் கோரி சைவ மகாசபையினர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் தலையீட்டு நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை சட்டத்தரணி வி.மணிவண்ணன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கு கடந்த ஒக்டோபர் மாதம் இறுதிக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார்.

இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அதன் மீது உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைதுசெய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்படுகிறது” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

இந்தத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)