Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

In இலங்கை
Updated: 17:43 GMT, Nov 14, 2017 | Published: 17:33 GMT, Nov 14, 2017 |
0 Comments
1274
icon_com
This post was written by : Vithushagan
DSC01943

வவுனியா – மறவன்குளம் பகுதியில்  சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய    ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக, 55 வயதுடைய வைரமுத்து சிவலிங்கம்  என்பவருக்கு  நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) இத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவனான வைரமுத்து சிவலிங்கம் என்பவரே சிறுமியை  இரண்டு தடவைகள்  பாலியல் வண்புனர்வுக்குட்படுத்தியுள்ளார்.

இதையடுத்து குறித்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் வவுனியா நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

கடந்த வருடம் அக்டோம்பர் மாதம் 26ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த எதிரிக்கு எதிரான குற்றப்பகிர்வுப்பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கம் முடிவுறுத்தப்பட்டு இன்றைய தினம் தீர்ப்பிற்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வழக்கு விசாரணை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், “எதிரியை குற்றவாளியாக கண்டு எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் முதலாவது குற்றச்சாட்டுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் நஸ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 2 வருட கடூழிய சிறை அனுபவிக்க வேண்டும் எனவும், தண்டப்பணமாக 10,000 ரூபாவினை செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறை அனுபவிக்க நேரிடும் எனவும் அறிவித்துள்ளார்.

இதேவேளை இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா நஸ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்ததவறின் 2 வருட கடூழிய சிறையை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டப்பணமாக 10,000 ரூபாவை செலுத்துமாறும் இதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் இத்தண்டனைகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg