Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 18:56 GMT, Nov 14, 2017 | Published: 18:55 GMT, Nov 14, 2017 |
0 Comments
1187
icon_com
This post was written by : elayathambi
_98727210_fae104cf-1652-4a24-9a19-ba9cfa1c9715

சிம்பாப்வேயின் தலை நகரை நோக்கி கனரக இராணுவ வாகனங்கள் முன்னேறிச் செல்வதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன. ஆட்சியில் இருக்கும் ரொபேர்ட் முகாபேக்கும் இராணுவத் தரப்பிற்கும் இடையே எழுந்துள்ள முறுகல் நிலையில் உச்சக் கட்ட நடவடிக்கையாக இது அமையலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

சிம்பாப்வேயில் ஆட்சியில் இருக்கும் ரொபேர்ட் முகாபே தலைமையிலான  ZANU–PF கட்சியின் ஆட்சி மீது தலையிடும் சூழ் நிலை தோன்றும் என நாட்டின் இராணுவத் தளபதி கொன்ஸ்ரைன் ச்சிவெங்கா தெரிவித்திருந்தார்.  நாட்டின் துணை அதிபர் எம்மர்சனை முகாபே பதவி நீக்கியதை அடுத்து, ஆட்சியினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

முகாபேயின் மனைவியை ஆதரிக்கும் ZANU–PF கட்சியின் இளையோர் அமைப்பு, தாம் துணை அதிபரை மீண்டும் பதவிக்கு கொண்டு வர முயற்சிப்பதாகவும் அதுவரை, தளபதியை மௌனமாக இருக்கும் படியும் கோரியிருந்தனர்.  அவர்களின் கோரிக்கைக்கு முரணாக இன்று  கனரக இராணுவ வாகனங்கள் தலை நகர் அராரே நோக்கி நகர ஆரம்பித்துள்ளன.

5568

ரஷ்யாவில் இடம்பெறும், உலகக் கோப்பைக்கான  கால்பந்தாட்டத்தில் பங்கேற்கும் தகைமைய இத்தாலிய கால் பந்தாட்ட அணி இழந்துள்ளது. நேற்று இரவு ஸ்வீடனுடான மோதலில் தோல்வி அடைந்ததை அடுத்து, இத்தாலி தகைமை இழந்திருக்கிறது. இதற்கு முன்னர் 1930 இலும் 1958 இலும் உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதி பெறவில்லை. ஆயினும் இம்முறை  தகுதி இழந்திருப்பது கடந்த 60 ஆண்டுகளில்  முதன்முறை ஆகும்.

நான்கு முறை உலக சாம்பியனாகவும், இரண்டு முறை இரண்டாம் இடத்தையும் எட்டிய இத்தாலி தகுதி இழந்திருப்பது அன் நாட்டு கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகத்தை உருவாக்கி உள்ளது. இத்தாலிய பத்திரிகைகள், இத்தாலியின் கால் பந்தாட்ட வரலாற்றின் முடிவு இது என இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

supreme-court-644x362

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான தீபக் மிஸ்ராவிற்கு எதிரான வழக்கின் காரணமாக, தாம் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  வழக்கொன்றின் திர்ப்பை சாதகமானதாக மாற்ற சகபாடிகளுக்கு, இலஞ்சம் வழங்கக் கோரிய வழக்கு முன்னாள் நீதிபதியான தீபக் மிஸ்ராவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. குறித்த வழக்கை முதலில் சிபி ஐ தாக்கல் செய்திருந்தது.

_97975660_52dea655-39d7-4192-ae17-3090c07a832e

வடகொரிய அதிபரை  ஒரு குள்ளன் என்றோ அல்லது ஒரு குண்டன் என்றோ நான்  ஒருபோதும் அழைக்கமாட்டேன் என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேலி செய்துள்ளார்.

ஐ.நா. சபை கூட்டத் தொடரில் பேசிய டிரம்ப், ஏவுகணை மனிதன் கிம் ஜாங் உன், தன் ஆட்சிக்கு முடிவு கட்ட ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறார் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த கிம் அமெரிக்காவின் தலைவர் கிழவன் என்றும், குரைக்கும் நாய் கடிக்காது என்றும் தனது  ருவிட்டரில் கூறினார். அதேவேளை அதிபர் ட்ரம்ப் மனநலம் குன்றிய ஒருவர் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று தனது ட்விட்டர் செய்தியில்,  கிம் ஜாங் உன் ஐ குள்ளன் என்றோ குண்டன் என்றோ  கூறமாட்டேன் என்று டிரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார். ட்ரம்பின் இந்த ருவிட்டர் செய்தி இன்று  சமூகவலைதளங்களில் வேகமாகப்  பரவியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)