Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக நாடுகளின் கேள்விகளுக்கு இலங்கை உரிய பதில் வழங்குமா?

In இலங்கை
Updated: 06:41 GMT, Nov 15, 2017 | Published: 03:33 GMT, Nov 15, 2017 |
0 Comments
1280
This post was written by : Varshini

ஐ.நா. மனித உரிமை பேரவையில் நடைபெற்று வரும் 28ஆவது பூகோள காலக்கிரம மீளாய்வு கூட்டத்தொடரில், இன்று (புதன்கிழமை) இலங்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து கேள்விக் கணைகளை தொடுக்க உலக நாடுகள் காத்திருக்கின்ற நிலையில், அவற்றிற்கு பதிலளிக்க இலங்கையின் வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஜெனீவா சென்றுள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு ஒருதடவை நடைபெறும் இக்கூட்டத்தொடரில், ஏற்கனவே கடந்த 2008ஆம் மற்றும் 2012ஆம் ஆண்டு இலங்கை குறித்து ஆராயப்பட்டிருந்தது. அப்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மற்றும் மனித உரிமையை மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக உலக நாடுகள் வலியுறுத்தியிருந்தன. இவற்றை செயற்படுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதென ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இலங்கையின் விசாரணை பொறிமுறை, சிறுபான்மை மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கான தீர்வு, காணி விடுவிப்பு, ஜெனீவா பிரேரணையின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பாக கேள்விகளை தொடுக்க ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் ஏற்கனவே தயாராகிவிட்டன.

இவை இலங்கைக்கு சவாலாக அமையவுள்ளதோடு, இதன் மூலம் இலங்கைக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg