Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2018 குடியரசு தினத்தில் ஆசிய நாட்டு தலைவர்கள் பங்கேற்பு: பிரதமர் உறுதி!

In இந்தியா
Published: 04:12 GMT, Nov 15, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Kemasiya
indi

எதிர்வரும் ஆண்டு (2018) ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள, இந்திய குடியரசு தினத்தில், ஆசிய நாட்டின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (செவ்வாய்கிழமை), பிரதமர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் பதிவிடப்பட்டுள்ளதாவது,

அடுத்த ஆண்டின் குடியரசு தின விழாவில், பல்வேறு ஆசிய நாட்டுத்தலைவர்களின் பங்கேற்பை எண்ணி, ஒவ்வொரு இந்திய குடிமக்களும் சந்தோசத்தில் உள்ளனர். எனவே எதிர்வரும் குடியரசு தினம், 125 கோடி இந்தியர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, பல நாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர், மேற்படி பதிவு செய்துள்ளமை, குடியரசு தினத்தில் ஆசியத் தலைவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளது.

இந் நிலையில், எதிர்வரும் ஆண்டின் குடியரசு தினத்தில் பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக, அண்மையில் வெளியாகிய மத்திய அரசின்  அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)