Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனித்து களமிறங்க மஹிந்த அணி தீர்மானம்!

In இலங்கை
Updated: 07:22 GMT, Nov 15, 2017 | Published: 03:51 GMT, Nov 15, 2017 |
0 Comments
1255
This post was written by : Varshini

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு மஹிந்த ஆதரவு பொது எதிரணி தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்திற்கு தலைமையேற்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகிவிட்டார்.

நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டு எதிரணியின் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் தம்முடன் இணைந்து போட்டியிட முன்வந்தால் அவர்களையும் இணைத்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்த மஹிந்த அணி, அதற்கான நிபந்தனைகளையும் விதித்திருந்தது. எனினும், ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கூட்டு எதிரணி, ஆளுங்கட்சியுடன் எவ்வித சமரசத்திற்கும் இனி இடமில்லையென தீர்க்கமாக கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg