Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலம் வாய்ந்த இந்திய அணியை இலங்கை தோற்கடிக்குமா? முரளி கருத்து

In கிாிக்கட்
Published: 05:38 GMT, Nov 15, 2017 |
0 Comments
1307
icon_com
This post was written by : Anojkiyan
muttiah-muralitharan

இந்திய அணிக்கெதிரான போட்டி தொடரில், இலங்கை அணி வெற்றிபெறுவதற்கு குறைந்தளவு வாய்ப்பே உள்ளதென இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டித் தொடர் குறித்து, கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டித் தொடரில் இலங்கை அணி வெற்றிப்பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. அனைத்து சர்வதேச அணிகளும் இந்தியாவை தோற்கடிக்க கடுமையாக முயற்சித்து வருகின்றது. கடந்த 13 வருடங்களில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணிகள் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிப் பெற்றுள்ளன.

தற்போது டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள இந்தியா அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதேபோல், இலங்கை அணி வீரர்களின் திறமைகளை இந்தியா சுற்றின்போது இனங்காண முடியும்” என கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg