Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் பீதியடைய தேவையில்லை- அனர்த்த முகாமைத்துவ நிலையம் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 11:19 GMT, Nov 15, 2017 | Published: 06:41 GMT, Nov 15, 2017 |
0 Comments
6639
This post was written by : Risha

கிழக்கு மாகாணத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும், எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் எம்.றியாஸ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மகாணத்தின் சில பகுதிகளில் கிணறுகள் வற்றியதால் மக்கள் மத்தியில் பெரும் பீதி கிளம்பியது. இந்நிலையிலேயே அனர்த்த முகாமைத்துவ நிலையம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கிணறுகள் வற்றியமையானது காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டதொன்றாகும் என்றும் அனா்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுனாமி பீதியில் கிழக்கு மக்கள்!

கிழக்கு மாகாணத்தில் கடற்கரையை அண்டிய சில பிரதேசங்களில் கிணறுகள் திடீரென வற்றியுள்ளதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்படுவதற்கு முன்னரும் இவ்வாறு கிணறுகள் திடீரென வற்றியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் பீதியில் அல்லலுற்று வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியிலும், அம்பாறை மாவட்டம் கல்முனை – பாண்டிருப்பு பகுதியிலும் கிணறுகள் திடீரென வற்றியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், உரிய தரப்புகளிடமிருந்து எவ்வித சுனாமி எச்சரிக்கை குறித்த அறிவித்தலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg