Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொக்குவில் தொழிநுட்பக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்! – நால்வர் படுகாயம்

In இலங்கை
Published: 05:30 GMT, Nov 15, 2017 |
0 Comments
1206
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
fights

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழிநுட்பக்கல்லூரி மாணவர்கள் மீது, கல்லூரியின் பிறிதொரு கற்கைநெறியைச் சேர்ந்த மாணவர்கள் நடத்திய தாக்குதலில் நால்வர் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிநுட்பக்கல்லூரியில் நேற்றைய தினம் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வு முடிவடைந்து வெளியில் வந்தவேளை, பிறிதொரு கற்கைநெறியை சேர்ந்த மாணவன் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கியதாகவும், பின்னர் சக மாணவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்ததாகவும் காயமடைந்த மாணவன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தாக்குதலை நடத்திய மாணவன் பின்னர் 10 பேர் கொண்ட மாணவர் குழுவுடன் வந்து தொழிநுட்பக் கல்லூரி மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்லூரிக்கு வெளியில் வந்தால் வாளால் வெட்டுவோம் என்றும் அச்சுறுத்திச் சென்றதால் மாணவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

தாக்குதலில் சுமார் 10 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்களின் 4 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் தமக்கு பரீட்சை முன்னோடி விரிவுரைகள் நடைபெறவுள்ளதாவும், அதற்கு செல்வதற்கு தமது கற்கை நெறி மாணவர்கள் பயத்துடன் காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)