Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொண்டமானின் பெயா் நீக்கத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்!

In இந்தியா
Updated: 07:46 GMT, Nov 15, 2017 | Published: 06:09 GMT, Nov 15, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Kemasiya
malayajkam

சௌமியமூர்த்தி தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயா் மாற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தி,மு.க. செயல் தலைவா் மு.ஸ்டராலின், நேற்று (செவ்வாய்கிழமை), வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்திலேயே அவா் இதனை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“இலங்கைக்கு இந்தியா நட்பு நாடக இருந்தாலும், இந்தியாவின் நல்லெண்ணத்திற்கு மாறாகவே இலங்கை செயற்படுகின்றது என்பதை, ஏமாற்றத்துடனும் வருத்ததுடனும் அறியத் தருகின்றேன்.

தற்போது மலையகத் தமிழர்களின் அன்புக்குரிய தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரில் இருந்த தொழிற்பயிற்சி நிறுவனத்தின் பெயரை இலங்கை அரசாங்கம் மாற்றியுள்ளது.

தமிழர்களுக்கும் அவா்களின் விரும்பங்களுக்கும் எதிரான இலங்கை அரசின் இவ்வாறான தொடர் நடவடிக்கைகள், ஒரு நட்பு நாட்டின் சமரசமிக்க, பொறுப்புமிக்க எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை.

எனவே சௌமியமூர்த்தி தொண்டைமான் பெயரை நீக்கும், உணர்வுபூர்வமான நடவடிக்கையை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதோடு, அந்த பெருமைமிக்க தலைவரின் பெயருக்கும் புகழுக்கும் எந்தவகையிலும் களங்கம் ஏற்படாமலும், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வகையிலும், அவருடைய பெயரை இடம்பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என ஸ்டாலின் அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)