Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடு திரும்புவதன் மூலமே ஹரிரியின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியும் – பஸில்

In உலகம்
Updated: 06:11 GMT, Nov 15, 2017 | Published: 06:11 GMT, Nov 15, 2017 |
0 Comments
1202
This post was written by : Suganthini

லெபனானின் முன்னாள் பிரதமர் ஸாட் அல் ஹரிரி நாடு திரும்புவதன் மூலம் மாத்திரமே, அவரது சுதந்திரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமென, லெபனான் வெளிவிவகார அமைச்சர் கெப்ரன் பஸில் (Gebran Bassil) தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங்குடன் பிரான்ஸில்  நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘லெபனான் பிரதமராக இருந்த ஸாட் அல் ஹரிரியின் பிரச்சினையை விரைவாகத் தீர்த்துவைப்பதற்கு நாம் எண்ணியுள்ள நிலையில், அவர் உடனடியாக நாட்டுக்குத் திரும்ப வேண்டுமென்று நாம் கோருகின்றோம். அவர் தனது சொந்த நாட்டுக்குத் திரும்புவதன் மூலமே அவர் சுதந்திரமாக உள்ளாரா என்பதையும்  எம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்’ என்றார்.

மேலும், ‘லெபனான் மீது சவுதி அரேபியாவால் முன்னெடுக்கப்படும எந்தவொரு நடவடிக்கைகளும் தாக்கம் செலுத்தாது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

லெபனான் பிரதமராக இருந்த ஸாட் அல் ஹரிரி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இதன் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்வதாகவும் சவுதி அரேபியாவில் தொலைக்காட்சிச் சேவையொன்றில் இம்மாதம் 4ஆம் திகதி தோன்றி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, சவுதியிலுள்ள ஸாட் அல் ஹரிரி நாடு திரும்ப வேண்டுமென்று லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் தான் லெபனானுக்குத் திரும்பவுள்ளதாக ஹரிரி தனது டுவீட்டர் செய்தியில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg