Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் கைதிகளின் விடுதலை தமிழ்த் தலைமைகளின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது: சிவசக்தி ஆனந்தன்

In இலங்கை
Updated: 08:07 GMT, Nov 15, 2017 | Published: 07:33 GMT, Nov 15, 2017 |
0 Comments
1174
This post was written by : Risha

தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து உரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சைட்டம் பிரச்சினைக்கு ஒரு விசேட குழு அமைத்து தீர்வு கண்டதைப் போன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்திற்கும் ஒரு விசேட குழு அமைத்து அரசியல் கைதிகளின் நிலைமைகளை ஆராய்ந்து துரிதமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என அரசியல் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நல்லிணக்கம், மனிதாபிமானம் என்றெல்லாம் பேசும் இந்த நல்லாட்சியில் அரசியல் கைதிகள் விடயம் மாத்திரம் கண்டுக் கொள்ளப்படுவதில்லை. எனவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தமிழ்த் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்.

சிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்கள் திருந்துவதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கின்ற ஒரு நிலையமாகச் சொல்லப்படுகின்ற போதிலும், தங்களை பொருத்தமட்டில், மேலும் தண்டித்து வருத்துவதற்காகவே விசாரணைகளின்றியும், வழக்குகளை விரைவாக முடிக்காமலும் வைத்திருக்கின்றார்கள் என்று எண்ணத் தோன்றுவதாக அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், கண்டி சிறைச்சாலையில் உள்ள ஏனைய கைதிகளினால் தங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய ந்pலைமை இருப்பதால், சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரின் ஊடாகத் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசியல் கைதிகள் என்னிடம் வலியுறுத்தினர்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg