Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு

In
Updated: 07:31 GMT, Nov 15, 2017 | Published: 07:31 GMT, Nov 15, 2017 |
0 Comments
1384
This post was written by : Suganthini

ரஷ்யாவில் சிறியரக விமானமொன்று திடீரென்று விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ரஷ்யாவுக்கு அப்பாலான ஹபரோவ்ஸ்க் (Khabarovsk) எனும் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. நெல்கன் கிராமத்திலுள்ள விமான நிலையத்தில்  குறித்த  விமானம்  தரையிறங்க முற்பட்டபோதே, விபத்து இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எல் -410 என்ற விமானமே விபத்துக்குள்ளானதாகவும் இதில் இரண்டு விமானிகள் உட்பட 8 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இந்த விபத்தின்போது பயணியொருவரும் சிறுபிள்ளையொன்றும் உயிர் பிழைத்துள்ளனர். இருப்பினும், இவர்களின் நிலைமை ஆபத்தான நிலைமையில் காணப்படுவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg