Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகம் தூய்மையில் சிறந்து விளங்குகிறது: ஆளுநர் பன்வாரிலால் பாராட்டு!

In இந்தியா
Updated: 08:15 GMT, Nov 15, 2017 | Published: 08:15 GMT, Nov 15, 2017 |
0 Comments
1155
This post was written by : Kemasiya

மகாராஷ்டிராவை விட, தமிழ்நாடு தூய்மையில் சிறந்து விளங்குவதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

இன்று காலை (புதன்கிழமை), காந்திபுரம் நகர பஸ் நிலையத்திற்கு சென்று, அப் பகுதியின் தூய்மை நிலை குறித்து பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

“கடந்த இரண்டு நாட்களாக, ஒவ்வொரு மாவட்டமாக சென்று துய்மைப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றேன். தொடர்ந்தும் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று, அங்கு தூய்மை நிலை குறித்து ஆய்வு செய்யவுள்ளேன்.

நான் முன்னர் மகாராஷ்டிராவில் ஆளுநராக செயற்பட்டேன். அங்கும் இவ்வாறு நேரில் சென்று பார்வையிட்டு, தூய்மை நிலை குறித்து ஆய்வு செய்வேன். அந்த வகையில் மகாராஷ்டிராவுடன் ஒப்பிடுகையில் தமிழகம் தூய்மையில் சிறந்து விளங்குகின்றது.

மேலும் அனைத்து மதங்களும் சுத்தம், சுகாதாரத்தை பேண வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. எனவே தூய்மையான இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg