Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு: வடக்கு ஆளுநர் உறுதி

In இலங்கை
Published: 08:01 GMT, Nov 15, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Risha

மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்துள்ளார்.

முல்லைத்தீவு மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பான முக்கிய சந்திப்பொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  நடைபெற்றது. குறித்த சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருவதோடு, இவர்களது காணிகள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆளுநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளிடம் கடிதங்களையும் கையளித்துள்ளனர்.

அவ்வாறு ஆளுநருக்கு கையளிக்கப்பட்ட காணிப்பிரச்சினை தொடர்பான கடிதங்கள் குறித்து, இன்றைய சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. ஆளுனருக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடைக்கப்பபெற்ற 40 முறைப்பாடுகளில் இன்று 20 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு தீர்வுகளும் காணப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள்,திணைக்களத் தலைவர்கள் மற்றும் கிராம அலுவலர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)