Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரவு – செலவுத் திட்டத்தில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு: கோடீஸ்வரன்

In இலங்கை
Published: 08:06 GMT, Nov 15, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பிரதேசங்களுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வரவு – செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில், நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சுகாதாரத்திற்கென பலதரப்பட்ட பிரதேச வைத்தியசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், எவ்வித வசதிகளும் இல்லாமல் காணப்படும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.

திருக்கோவிலுக்கு அருகிலுள்ள கிராமங்களின் பிரதேச வைத்தியசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு, அவை ஆதார வைத்தியசாலையிலும் பார்க்க உயர்ந்த நிலையில் உள்ளதென கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் நிலையை கருத்திற்கொண்டு, நிதியமைச்சு அதற்கு கூடுதலான நிதியை ஒதுக்கித் தரவேண்டுமென கோடீஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)