Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆந்திர அரசின் விருதுக்கு கமல், ரஜினி தெரிவு!

In சினிமா
Updated: 08:40 GMT, Nov 15, 2017 | Published: 08:40 GMT, Nov 15, 2017 |
0 Comments
1168
This post was written by : Ravivarman

ஆந்திரப்பிரதேச அரசின் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதான நந்தி விருது (2014-ம் ஆண்டு) கமல்ஹாசனுக்கும்,  (2016-ம் ஆண்டு) ரஜினிகாந்த் ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது.

ஆந்திர அரசின் சார்பில் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதுகள் திரைப்பட துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டும் என்.டி.ஆர். விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற பாகுபலி திரைப்படம் 2015-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், 2016-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பெல்லி சூப்புலு தேர்வாகியுள்ளது.

இதேவேளை 2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான லிஜெண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர அரசின் விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg