Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்!

In இந்தியா
Updated: 08:54 GMT, Nov 15, 2017 | Published: 08:54 GMT, Nov 15, 2017 |
0 Comments
1244
This post was written by : Kemasiya

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து, இன்று (புதன்கிழமை) தமிழக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், தாக்குதல் நடத்திய கடற்படையினரை கைது செய்யக் கோரி   குறித்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் சுமார் 800 படக்களில், 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த சம்பவத்தை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், குறித்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துரத்திய நிலையில், அவர்களிடம் இருந்து தப்புவதற்காக விரைந்து சென்ற மீனவர்களை, இந்திய கடற்படை மறித்துள்ளது.

எனினும் கடற்படையின் உத்தரவைமீறி கரை திரும்பிக் கொண்டிருந்த மீனவா்ளை நோக்கி இந்திய கடற்படையினர் றப்பா் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், இரண்டு மீனவா்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg