Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூடானில் கடத்தப்பட்ட சுவீஸ் மனிதநேய உதவியாளர் விடுவிப்பு

In ஐரோப்பா
Updated: 09:43 GMT, Nov 15, 2017 | Published: 09:43 GMT, Nov 15, 2017 |
0 Comments
1166
This post was written by : Suganthini

சூடானில் மோதல் பிரதேசமான டார்பூரில் கடத்தப்பட்ட சுவீஸைச்  சேர்ந்த மனிதநேய உதவியாளர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

டார்பூரிலுள்ளஅவரது வீட்டுக்கு அருகில் வைத்து கடந்த மாதம் இனந்தெரியாத குழுவொன்று இவரைக் கடத்திச்சென்றுள்ளது.  இவர் கடத்தப்பட்டுள்ளதை கேள்வியுற்ற சுவீஸ் அரசாங்கம், இவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தது.

இந்நிலையில், Kutum  பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த முற்றுகை நடவடிக்கையைத் தொடர்ந்து, இவரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவரை எவர் கடத்திச்சென்றனர் என்பது தொடர்பான தகவலை சூடானிய அரசாங்கம் வெளியிடவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg