Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யானையின் தாக்குதலால் பயன்தரு மரங்களிற்குச் சேதம்!

In இலங்கை
Published: 09:59 GMT, Nov 15, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Ravivarman
DSC_0022

வவுனியா, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக் கூட்டத்தின் அட்டகாசத்தால் தற்காலிக வீடு சேதமடைந்துள்ளதுடன், சுமார் 30 தென்னை மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் அண்மைக்காலமான மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக பல இடங்களில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் யானைகளுக்கான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்ட போதிலும் இன்றும் பல கிராமங்கள் யானையின் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றன.

இந்நிலையில், இன்று அதிகாலை புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் வந்த யானைக்கூட்டமொன்று அங்கிருந்த தென்னந்தோட்டமொன்றினுள் புகுந்து காய்க்கும் பருவத்தில் இருந்த தென்னை மரங்களை அழித்துள்ளதுடன் பயன்தரு மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

இதேவேளை அப்பகுதியில் இருந்த தற்காலிக வீடொன்றின் சுவரை தாக்கி உடைத்துள்ள யானை பல காணிகளினுள் இருந்த தென்னை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

தேங்காயின் விலையேற்றம் அதிகமாகவுள்ள நிலையில் தென்னை மரங்களை யானை அழிப்பது தொடர்பில் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டதுடன், தமது கிராமத்திற்கு வரும் யானைகளை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.

IMG_9223 IMG_9182 DSC_0012 DSC_0010 DSC_0011

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg