Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய சுற்றுப்பயணத்தின் வெற்றி குறித்து ட்ரம்ப் உரை

In
Published: 10:55 GMT, Nov 16, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Risha

தனது ஆசிய சுற்றுப்பயணம் வெற்றியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் நியாயமான மற்றும் சமமான வர்த்தக நடைமுறைகளை பேணுவதற்கான சீனாவிற்கான அழைப்பை மேற்கோள்காட்டி அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது சமீபத்திய ஆசிய விஜயம் குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) விளக்கமளிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ட்ரம்ப், ”சீனாவிற்கான விஜயத்தின்போது, வடகொரியா குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை செயல்படுத்துவதற்கு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் உறுதியளித்தார்.

மேலும், அமெரிக்க தொழில்வாய்ப்புகள் மற்றும் வருவாயை பாதிக்கும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் சீனாவுடனான நமது வர்த்தக உறவு உண்மையிலேயே நியாயமான மற்றும் சமமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக சீன ஜனாதிபதியுடன் மிகவும் நேர்மையான உரையாடலைக் மேற்கொண்டிருந்தேன்.

அதேவேளை, ஜப்பான் நிறுவனங்கள், அமெரிக்காவில் 8 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதன்மூலம் 17 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg