Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிலக்கரி பயன்பாடு குறைக்கப்படும்: ஜேர்மன்- பிரான்ஸ் உறுதி

In ஐரோப்பா
Updated: 11:15 GMT, Nov 16, 2017 | Published: 11:15 GMT, Nov 16, 2017 |
0 Comments
1278
This post was written by : Risha

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கவுள்ளதாக ஜேர்மனும், பிரான்ஸும் உறுதியளித்துள்ளன.

ஜேர்மனில் நடைபெற்றுவரும் ஐ.நா. காலநிலை மாநாட்டின் ஒரு அங்கமாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இந்த உறுதியை வழங்கியுள்ளனர்.

இதேவேளை, காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு, உலகளாவிய ரீதியில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், 2015 பரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையானது, புவி வெப்பமடைவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஆரம்பமே என்றும் இந்நடவடிக்கை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg