Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாகன இறக்குமதி வரியில் மேலும் தளர்வுகள்!

In இலங்கை
Updated: 06:19 GMT, Nov 17, 2017 | Published: 06:19 GMT, Nov 17, 2017 |
0 Comments
1129
This post was written by : Ravivarman

வாகன இறக்குமதி தொடர்பில் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்ட கொள்கைகளில் மேலும் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் நவம்பர் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் பத்திரங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வரவு செலவுத்திட்டத்திற்கு ஏற்கனவே இருந்த இறக்குமதித் தீர்வையின் பிரகாரம் விடுவித்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இத்தகைய வாகனங்களை அடுத்த வருடம் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் சுங்கத்திலிருந்து விடுவித்துக் கொள்வது அவசியம் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மின்வலுவில் இயங்கும் வாகனங்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் இறக்குமதி தீர்வைச் சலுகை வழங்கப்பட்டது. இச் சலுகையை ஒரு வருடத்திற்கு மேற்படாமல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் வழங்குவதெனத் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் வாகனங்களுக்கான குத்தகை வசதிகள் 50 சதவீதமாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது 30 சதவீதமாக இருந்தால் போதுமானதென நிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg