Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் அச்சுறுத்தல்- பாதுகாப்பை அதிகரிப்பதாக ஜப்பான் பிரதமர் உறுதி

In உலகம்
Published: 07:02 GMT, Nov 17, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Elakkiya

வடகொரியாவின் அச்சுறுத்தல்கள் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பான் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதுகாப்பு சவால் என்று குறிப்பிட்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தமது நாட்டின் பாதுகாப்பை அதிகரிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற உரையில் இவ்வாறு ஜப்பானுக்கான முன்னுரிமைகள் தொடர்பில் கோடிட்டு காட்டிய அபே, வடகொரியாவின் ஆறாவது அணுசோதனை தொடர்பிலும் விபரித்தார்.

இதன்போது, வடகொரியாவின் ஆத்திரமூட்டும் வகையிலான செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏவுகணை பாதுகாப்பு திறன்கள் உள்ளடங்கலாக மக்களின் வாழ்வு மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதற்காக ஜப்பானிய பாதுகாப்பு அதிகாரத்தை பலப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, வடகொரியா தனது கொள்கைகளை மாற்றுவதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg