Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாஃபியா தலைவர் சால்வடோர் றைனா மரணம்: இத்தாலி அறிவிப்பு

In ஐரோப்பா
Published: 10:43 GMT, Nov 17, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Elakkiya

20 ஆம் நூற்றாண்டின் பலம்வாய்ந்த மாஃபியா தலைவரான சால்வடோர் ‘டொரோ’ றைனா (Salvatore “Toto” Riina) புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக இத்தாலிய நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 1977 மற்றும் 1992 ஆம் ஆண்டுக்கு இடையில் இடம்பெற்ற 150 க்கும் அதிகமான கொலைகளுக்காக 26 வருட ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 87 வயதாக றைனா பர்மாவிலுள்ள சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

‘த பீஸ்ட்’ என செல்லமாக அழைக்கப்படும் இவர் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கர்லோனின் தூசி நிறைந்த தெருக்களில் தனது வன்முறை குற்றவியல் தொழிலை தொடங்கினார். அவரது குற்றச் செயல்கள் உச்சத்தை தொட்டபோது 20 ஆம் நூற்றாண்டில் சிசிலியன் மாஃபியா தலைவராக உருவாகினார்.

இவருடைய கொடுமைகள் மற்றும் வன்முறைகள் காரணமாக 1980 மற்றும் 1990 களில் நூற்றுக்கணக்கானோர் தமது அமைதியையும் அச்சத்தையும் களைந்து றைனாவுக்கு எதிராக சாட்சியமளித்தனர்.

அதன்படி 1993 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட றைனாவுக்கு 26 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை குறப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg