Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொகுசுகார் இறக்குமதி வழக்கில் நடராஜனுக்கு சிறைத்தண்டனை

In இந்தியா
Updated: 15:12 GMT, Nov 17, 2017 | Published: 11:28 GMT, Nov 17, 2017 |
0 Comments
1189
icon_com
This post was written by : Kemasiya
1484073036

சொகுசுக்கார் இறக்குமதி வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட இவ் வழக்கில், நடராஜன், பாஸ்கரன் உட்பட மேலும் இரண்டு பேருக்கு, இரண்டு வருட சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு லெக்சஸ் என்னும் சொகுசு காரை இறக்குமதி செய்ததாக கூறி, 1.62 கோடி ரூபாவை மோசடி செய்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. நீதிமன்றம், கடந்த 2010 ஆம் ஆண்டு இவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்திருந்தது.

ஆனால் சி.பி.ஐ தமது கோரிக்கைகளை ஏற்று சீராக விசாரிக்கவில்லை என கூறி, சென்னை உயர் நீதிமன்றில் நடராஜன் தரப்பு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, குறித்த வழக்கு மீள் விசாரணைக்கு உட்படுத்தபட்டு வந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, இவர்களுக்கான 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந் நிலையில் அதை ஏற்க மறுத்த நடராஜன் தரப்பு, நீதிமன்றில் ஆஜராக கால அவகாசம் கேட்டது. அதற்கு,  குறித்த கால அவகாசத்தை சி.பி.ஐ. நீதிமன்றில் கோரும்படி கூறி,  தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டிருந்தது சென்னை உயர் நீதிமன்றம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg