Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசியக் கொடியை ஏற்ற கல்வியமைச்சர் மறுப்பு

In இலங்கை
Published: 11:02 GMT, Nov 17, 2017 |
0 Comments
1303
icon_com
This post was written by : Risha

வவுனியா பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தேசியக் கொடி ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

வவுனியா ஈரப்பெரியகுளம் பரகும்பா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வை, தேசிய கொடியேற்ற ஆரம்பித்து வைக்குமாறு பாடசாலை அதிபர் மாகாண கல்வியமைச்சரை பணித்துள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், தேசிய கொடியை ஏற்றுமாறு வட மாகாணசபை உறுப்பினர் ஏ. ஜயதிலகவை கோரியுள்ளார்.

இதனால், அங்கு சில நிமிடங்களுக்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் வடமாகாண சபை உறுப்பினர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் தேசிய மற்றும் பாடசாலைகளை கொடிகளை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

6 8

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg