Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் சாதகமான பதிலளிக்கும்: தெரேசா மே

In
Updated: 12:18 GMT, Nov 17, 2017 | Published: 12:17 GMT, Nov 17, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Elakkiya
5566801d-11cf-4246-811d-a56865b16239

பிரெக்சிற்றுக்கான தனது திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் சாதகமான பதிலளிக்கும் என்று எதிர்பார்ப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ஸ்வீடன் Gothenburgல் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய சமூக உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள தெரேசா மே இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியம் சாதகமான பதிலளிக்கும் என்று நம்புகின்றேன். எதிர்காலத்திற்கான சிறந்த ஏற்பாடுகளை நாம் பெற முடியும். அவை பிரித்தானியா மற்றும் மீதமுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளை சேர்ந்த மக்களுக்கு சிறந்ததாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான சட்டமூலத்தில் பிரித்தானியா அதன் கடமைகளை மதிக்கும் என்றும் அவர் மீள வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg