Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசி மகள் ஷகிலா வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்: விசாரணை ஆரம்பம்!

In இந்தியா
Updated: 12:57 GMT, Nov 17, 2017 | Published: 12:57 GMT, Nov 17, 2017 |
0 Comments
1252
This post was written by : Kemasiya

இளவரசி மகள் ஷகிலா, நூதம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

வரித்துறையினர் சோதனையை தொடர்ந்து விடுக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணியளவில், ஷகிலா வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

இவருடன் சட்டத்தரணியும் உடனிருக்கும் நிலையில், இவர்களிடம் 2 மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்படக்கூடும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் தொடர்ந்து நான்கு நாட்களாக, வருமான வரித்துறையினர்  சசிகலாவின் உறவினர்களிடம் மேற்கொண்ட சோதனையில், இளவரசி வீட்டில் இருந்து கணக்கில் இல்லாத சொத்துக்கள் ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர்.

இந் நிலையில், இது குறித்த விசாரணைக்காக, இளவரசியின் மகள் ஷகிலாவை வரித்துறையினர் அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg