Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெஹ்ரானிடம் பிரித்தானியா 400 மில்லியன் பவுண்ட்ஸ் கடன்!

In
Updated: 15:21 GMT, Nov 17, 2017 | Published: 13:13 GMT, Nov 17, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Elakkiya
19f35e59-729c-4d22-a016-7a7ed4f775ab

தெஹ்ரானால் பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்ட கடன் விரைவில் ஈரானின் மத்திய வங்கிக்கு மாற்றப்படும் என ஈரானுக்கான பிரித்தானிய தூதுவர் ஹமீத் பைடைனேஜட் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் பல தசாப்தங்களாக நீடித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி 400 மில்லியன் பவுண்ட்ஸ்கள் ஈரானின் மத்திய வங்கிக்கு மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாசனின் ஷகஹாரி தனது கைதினை இந்தக் கடனோடு தொடர்புபடுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இமாம் கோமினி சர்வதேச விமான நிலையத்தில் நாசனின் ஷகஹாரி (Nazanin Zaghari) என்பவர் புலனாய்வு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் ஈரானின் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டிலோ அல்லது வேறு ஏதோ ஒரு குற்றச்சாட்டிலோ கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கும் ஹமீத் பிரித்தானிய கடனுக்கும் அவருடைய கைதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg