Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச போட்டிக்காக கிளிநொச்சி மாணவன் சிங்கப்பூர் பயணம்!

In இலங்கை
Updated: 17:59 GMT, Nov 17, 2017 | Published: 17:59 GMT, Nov 17, 2017 |
0 Comments
1292
This post was written by : Vithushagan

சர்வதேச ரீதியில் நடைபெறும் கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றுவதற்காக கிளிநொச்சியைச் சேர்ந்த மாணவன்   சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வி பயிலும் தெய்வேந்திரம் திருக்குமார் என்ற மாணவரே இந்த வாய்ப்பினை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை இலங்கையிலிருந்து சர்வதேச ரீதியல் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டிக்குத் தெரிவாகியுள்ள 6 மாணவர்களில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு தமிழ் மாணவன் என்ற பெருமையை அவர் தட்டிக் கொண்டுள்ளார்.

குறித்த போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள நிலையில் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தெய்வேந்திரம் திருக்குமார் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டிற்கு பெருமை தரும் வகையில் சாதிக்கம் மாணவர்கள் தொடர்பில் ஊக்கமளிக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg