Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலியின் சில பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 04:42 GMT, Nov 18, 2017 | Published: 19:00 GMT, Nov 17, 2017 |
0 Comments
1695
This post was written by : S.K.Guna
police-curfew- in-galle

காலியின் சிலபகுதிகளில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக கருவாதோட்டம், மாஹப்புகல, வெலிபிட்டிமோதர, உக்வத்த, ஜின்தோட்ட மற்றும் பியன்திகம கிராமசேவையாளர் பிரிவுகளில் இந்த ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காலி, கிங்தொட்டை என்ற கிராம பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியதுடன், இதில் ஒருவர் காயமடைந்த நிலையில், வீடுகள் சிலவற்றிற்கும் சேதமேற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன் நிலைமையை கட்டுப்படுத்த விஷேட அதிரடிபடையினரும், அதிகளவிலான பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவராயினும் போலியான பிரசாரங்களை முன்னெடுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

galle

காலியின் சிலபகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

காலியின்  சிலபகுதிகளில்  ஏற்பட்ட  பதற்றநிலை காரணமாக பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் ஊரடங்கானது குருந்துவத்தை, மஹாஹப்புகல, வெலிபிட்டிமோதர, உக்வத்த, ஜின்தோட்ட மற்றும் பியன்திகம கிராமசேவையாளர் பிரிவுகளில் உடனடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதற்றநிலையைக்  கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்   பொலிஸ் ஊரடங்கானது நாளை காலை 9 மணி வரை இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைதியை ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர், பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய நூற்றுக்கணக்கான பொலிசார் பாதுகாப்புக்  கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg