Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் இன்னிங்ஸில் 172 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது இந்திய அணி

In கிாிக்கட்
Updated: 07:11 GMT, Nov 18, 2017 | Published: 07:07 GMT, Nov 18, 2017 |
0 Comments
1976
icon_com
This post was written by : Elakkiya
qck_c92b6_1510978345

இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 59.3 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெறும் இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய இந்திய அணி துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையான புஜாரா 52 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணியின் சார்பில் பந்து வீச்சில் சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும் லகிரு கமகே, தசுன் சானக மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

போட்டியின் முதல்நாள் ஆட்டமும் இரண்டாம் நாள் ஆட்டமும் மழையால் தடைப்பட்டிருந்த நிலையில் முதல்நாள் ஆட்டநேர நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ஓட்டங்களை பெற்றிருந்த இந்திய அணி இரண்டாம் நாள்  ஆட்டநேர நிறைவில் 32.5 ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg