Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலியில் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டது எனினும் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு

In இலங்கை
Published: 06:59 GMT, Nov 18, 2017 |
0 Comments
1146
This post was written by : Arul Jesu
ruwan

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் இதுவரை 19 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அதேபோல் குறித்த தாக்குதல் சம்பவத்தையடுத்து காலி பிதேசத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரங்குச் சட்டம் காலை 09 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கருவாதோட்டம், மாஹப்புகல, வெலிபிட்டிமோதர, உக்வத்த, ஜின்தோட்ட மற்றும் பியன்திகம கிராமசேவையாளர் பிரிவுகளில் இந்த ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

காலி, கிங்தொட்டை என்ற கிராம பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியதுடன், இதில் ஒருவர் காயமடைந்த நிலையில், வீடுகள் சிலவற்றிற்கும் சேதமேற்படுத்தப்பட்டது.

எனினும் குறித்த பகுதியில் சுமார் 200 க்கும் அதிகமான பொலிஸாரும், நூற்றிற்க்கும் அதிகமான விஷேட அதிரடிபடையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg