Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலி சம்பவம் குறித்து பொதுபல சேனா விசேட அறிக்கை!

In இலங்கை
Published: 10:14 GMT, Nov 18, 2017 |
0 Comments
2171
This post was written by : Ravivarman
bbs-gnanasera11

காலி, கிந்தொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் விசேட அறிவித்தல் ஒன்றை இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்கள் சிலவற்றில் கிந்தொட்ட சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பொதுபல சேனாவின் பெயரில் பொய்யான பிரச்சாரங்கள் பல வெளியாகியுள்ளதாகவும் மேற்படி அறிக்கையில் பொதுபல சேனா குறிப்பிட்டுள்ளது.

நிலைமைகளைக் கண்டறிந்து, விசேடமாக காயமடைந்தவர்கள் மற்றும் சொத்து சேதம் ஏற்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டி அப்பிரதேசத்தில் சமாதானத்தை உறுதிப்படுத்த பொதுபல சேனாவின் ஞானசார தேரர் காலிக்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசியல் தலைவர்கள் சிலரால் பொலிஸார் மீது விடுக்கப்பட்ட அழுத்தங்கள் அப்பிரதேசத்தில் விளைவை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg