Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹபீஸ் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்: வசிம் அக்ரம்

In கிாிக்கட்
Updated: 10:43 GMT, Nov 18, 2017 | Published: 10:35 GMT, Nov 18, 2017 |
0 Comments
1255
This post was written by : Elakkiya

பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீஸ் தனது கிரிக்கட் வாழ்க்கையை நீடிக்க வேண்டுமாயின் பந்துவீச்சை கைவிட்டு துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசிம் அக்ரம் அறிவுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது மேற்படி தெரிவித்த வசிம் அக்ரம், துடுப்பாட்டத்தில் ஹபீஸ் தனது கடுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வீரரான மொஹமட் ஹபீஸின் பந்து வீச்சு சர்வதேச கிரிக்கட் விதிமுறையை மீறி அமைந்துள்ளதாக  மூன்றாவது முறையாகவும் அவருக்கு பந்துவீச்சு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற பந்துவீச்சு மதிப்பீட்டு பரிசோதனையில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஹபீஸூக்கு மேற்படி பந்துவீச்சு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே வசிம் அக்ரம் மேற்படி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg