Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலாவது டெஸ்ட்- முதலிரு நாட்களும் பாதகமான நிலையை தோற்றுவித்தது: இந்திய பயிற்சியாளர்

In கிாிக்கட்
Updated: 11:08 GMT, Nov 18, 2017 | Published: 11:07 GMT, Nov 18, 2017 |
0 Comments
1460
icon_com
This post was written by : Elakkiya
team-story_647_111717060938

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலிரு நாட்களும் மழை காரணமாக குழப்பம் நிறைந்ததாகவே அமைந்ததாக இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்த நேரம் பாதகமான நிலைமையை தோற்றுவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இதுபோன்ற நாட்களில் அணியாக இணைந்து செய்வதற்கு என்ன இருக்கின்றது. வீரர்கள் ஓய்வு அறையில் நேரத்தை செலவழிக்கின்றனர். எனினும் எஞ்சியுள்ள நாட்களில் முழுமையான நாளும் விளையாடினால் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg