Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய பிரதமர் ரூடோவின் பொருளாதார செயற்திறன் தொடர்பில் கருத்துக்கணிப்பு

In கனடா
Updated: 11:43 GMT, Nov 18, 2017 | Published: 11:41 GMT, Nov 18, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Elakkiya
s

ஜி-7 நாடுகளில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கனடா கொண்டிருக்கலாம் ஆனாலும் அதற்கான முழுமையான மதிப்பு பிரதமர் ஜஸ்ரின் ரூடோவையோ அல்லது அவருடைய அரசாங்கத்தையோ சேராது என அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கருத்துக்கணிப்பின் பிரகாரம், நான்கில் ஒரு பகுதி கனேடியர்கள் ரூடோவின் பொருளாதார செயற்திறன் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை 36 சதவீதமானோர் ரூடோவின் பொருளாதார திறன் மோசமானது என்றும் மற்றொரு பகுதியினர் சராசரியாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

வட்டி விகிதங்கள் மற்றும் வருமான சமத்துவமின்மை தொடர்பான கவலைகளை கருத்தில் கொண்டு ரூடோவின் பொருளாதார செயற்திறன் மோசமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். 84 சதவீதமான கனேடியர்கள், செல்வந்தர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையில் அதிகரித்துவரும் இடைவெளி தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.

மற்றுமொரு 88 சதவீதமானோர் வீட்டு வசதி பற்றாக்குறை தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg