Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆயுத வர்த்தக உடன்படிக்கையில் திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும்!

In கனடா
Updated: 12:22 GMT, Nov 18, 2017 | Published: 12:18 GMT, Nov 18, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Elakkiya
Upgraded LAV Unveiling 20130124

ஆயுத வர்த்தக உடன்படிக்கையில் சரியான திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் துன்பங்களை தடுக்கவும் சர்வதேச ஆயுத விற்பனையில் ஒழுக்க விதிகளை உயர்த்தவும் கனடாவுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

ஒவ்வொரு நாளும் 15 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒளி கவச வாகனங்களை சவுதி அரேபியாவுக்கு கனடா விற்பனை செய்வது மேலும் மேலும் ஏற்க முடியாத ஒரு விடயமாக மாறியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகிய ஒரு ஆய்வுத் தகவலில், 64 சதவீதமான கனேடியர்கள் மனித உரிமை மீறல்களுக்கு இழிபுகழ் பெற்ற நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் உலகில் மிகவும் கடுமையானவை என அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் பெரும்பாலான கனேடியர்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர்.

சர்வதேச ஆயுத வர்த்த ஒப்பந்தத்தின் பிரகாரம், சர்வதேச சமாதானத்திற்கான பங்களிப்பு, மனித துன்பங்களை குறைத்தல், சர்வதேச ஆயுத வர்த்தகத்தில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவித்தல் போன்ற உயர்ந்த இலக்குகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருப்பதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg