Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோர்வூட் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!

In இலங்கை
Published: 15:02 GMT, Nov 18, 2017 |
0 Comments
1094
icon_com
This post was written by : Ravivarman

நோர்வூட் பகுதியில் பல வர்த்தகர்களுக்கு எதிராக இன்று (சனிக்கிழமை) வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார அலுவலகத்தின் பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.

காலாவதியான மற்றும் மனித பயன்பாட்டுக்கு உதவாத உணவு வகைகள் திண்பண்டங்கள், பேக்கரி உணவுகள் ஆகியவற்றை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராகவே மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை பருவகால ஆரம்பத்தினை முன்னிட்டு இப்பிரதேசத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்று திடீர் சுற்றிவளைப்பினை நோர்வூட் நகரில் மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சுற்றிவளைப்பின் போது ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்கள் சில்லறை வர்த்தக நிலையங்கள் போன்றவை சோதனையிடப்பட்டதுடன், பலகடைகளில் காலாவதித் திகதி அச்சிடப்படாத மற்றும் பாதுகாப்பான முறையில் பொதியிடப்படாத உணவுப்பண்டங்கள் அழிக்கப்பட்டன.

வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட வர்த்தகர்கள் அனைவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொது சுகாதார உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.

இச்சுற்றிவளைப்பிற்கு 5 இற்கும் மேற்பட்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன், நோர்வூட் நகரிலுள்ள வெதுப்பகங்கள், உணவகங்கள், இறைச்சிக்கடைகள் உட்பட பல சில்லறைக்கடைகளும் சோதனையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC09309 DSC09299 DSC09293

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg